இந்தியா முக்கியச் செய்திகள்

மாநிலங்களுக்கு 16 கோடி இலவச தடுப்பூசிகள்: மத்திய அரசு!

மாநிலங்களுக்கு 16 கோடி தடுப்பூசிகள் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும், இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களில், தற்போது, ஒரு கோடி டோஸ்கள் தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும், அடுத்த 3 நாட்களுக்குள் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்துக்கு இதுவரை 65 லட்சத்து 28 ஆயிரத்து 950 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 8.83 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகள் வீணாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 62 லட்சத்து 97 ஆயிரத்து 671 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம் வழங்கியது வாட்ஸ் அப்!

Jayapriya

தியேட்டர்கள் மூடல்.. ஓடிடியை நாடும் திரைப்படங்கள்!

Karthick

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

Karthick