செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

வரும் 15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்தி, களமிறங்கும் தொகுதி மற்றும் வேட்பாளர்களையும் உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 70 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து 43 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், பழ.கருப்பையா தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வரும் 15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக இக்கூட்டணியுடன் இணைவதாக தகவல்கள் பரவி வந்திருந்து. ஆனால், தற்போது தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், மநீம,சமக,ஐஜேகே கூட்டணியாக போட்டியிடுகிறது. இதனால் தமிழக தேர்தல் களத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பொங்கல் விடுமுறை: சென்னையில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை!

Saravana

இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!

Nandhakumar

மூன்றாவது தவணை தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பலனளிக்குமா?; சோதனையை துவக்கிய பாரத் பயோடெக் நிறுவனம்

Saravana Kumar