தமிழகம் முக்கியச் செய்திகள்

12-ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 3ம் தேதி மொழிப்பாடமும், மே 5ம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 7ம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளும், மே 11ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் பாடங்களுக்குத் தேர்வுகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும், மே 19ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வும், மே 21ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

இந்தியாவில் ஒரு கோடியை கடந்த கொரோனா!

Saravana

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!

Nandhakumar

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி

Ezhilarasan

Leave a Comment