உலகம் முக்கியச் செய்திகள்

இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்தியா கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய மக்கள் தற்போது கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 10 மில்லியன் டாலரை கனடா ரெட் கிராஸ் மூலமாக இந்திய ரெட் கிராஸிற்கு வழங்கியுள்ளோம். மேலும் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

ஏழைமக்களுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது : ஓபிஎஸ்!

Karthick

அரசு பேருந்தில் பெண்கள் மீது ஆசிட் வீசிய வடமாநில இளைஞர்கள்!

Jeba

மத்திய பிரதேசத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

Saravana Kumar