வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய திமுக துடிக்கிறது என அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் போட்டியிடுகிறார். கிராம கிராமமாக தேர்தல் பரப்புரையில் கொலசனஹள்ளி, அத்திமுட்லு, சாஸ்திமுட்லு ஆகிய பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்தில் 40 ஆண்டுகளாக ஒரு சமுதாய மக்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகின்றனர்.
அந்த சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அவர்களின் பரிந்துரைப்படி அதிமுக அரசு 10.5% உள் ஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கியது. இந்த ஒதுக்கீடு மற்ற சமுதாயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், இந்த உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி திமுக அனுதினமும் நீதிமன்றத்தை நாடி வருவதாக கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டினார்.
Advertisement: