தமிழகம் முக்கியச் செய்திகள்

1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு!

முதல்கட்டமாக 1 கோடியே 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும், என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதன் முதற்கட்டமாக 1 கோடியே 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலமாக, கொள்முதல் செய்து வழங்குவதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 55 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!

Jeba

“தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அதிமுகவில் இணைந்தேன்” – பேராசிரியர் கல்யாண சுந்தரம்

Saravana

சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!

Jeba