30.6 C
Chennai
April 19, 2024
செய்திகள் சினிமா

ஒருபுறம் சினிமா, மறுபுறம் பிசினஸ்… முதலீட்டாளர்களாக மாறிய பிரபல நடிகைகள்!

பிரபல நடிகைகளின் கவனம் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது பல்வேறு நிறுவனங்கள் மீதும் திரும்பியுள்ளது. ஸ்டார்டப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகின்றனர். நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சில முக்கிய நடிகைகளின் விவரங்களை இங்கே காண்போம்.

தீபிகா படுகோன்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் கடந்த ஆண்டு பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான Epigamia-ல் முதலீடு செய்திருந்தார். தற்போது ஆன்லைன் கற்றல் தளமான Frontrow-ல் முதலீடு செய்துள்ளார். Lightspeed, Elevation Capital மற்றும் தீபிகா படுகோன் முதலீடு செய்ததன் மூலம் 3.2 பில்லியன் டாலர்கள் முதலீடு அதிகரித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆலியா பட்:


இவர் சமீபத்தில் ஆன்லைன் வணிக தளமான Nykaa-ல் முதலீடு செய்துளார். இதுவரை இரண்டு முறை அவர் அந்நிறுவனத்திற்கு இரண்டாம் நிலை பரிவர்த்தனை செய்துள்ளார். நைகா நிறுவனம் ஸ்டீட்வியூ கேப்பிட்டல் மூலம் 100 கோடி ரூபாய் முதலீட்டினை திரட்டியதாக கூறப்படுகிறது.

கத்ரீனா கைஃப்:


பிரபல நடிகையான இவரும் Nykaa தளத்தில் தான் முதலீடு செய்துளார். இவர் கடந்த ஆண்டு Kay beauty என்ற தளத்தை அறிமுகம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

காஜல் அகர்வால்:


தென்னிந்திய படங்களில் முன்னணியில் இருக்கும் இவர் கேமிங் தளமான Okie gaming-ல் முதலீடு செய்துள்ளார். இதில் பயனர்களை கவரும் வகையில் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரமும் செய்து வருகிறார். இது தனக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதாகவும் கூறியிருந்தார்.

ஐஸ்வர்யா ராய்:


பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய், கடந்த ஆண்டு தனது தாயாருடன் சேர்ந்து Ambee என்ற சுற்றுச்சூழல் சம்பந்தமான நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தார். காற்று மாசை கண்காணித்து தரவுகள் சேமிக்கும் நிறுவனம் இது. 

பிரியங்கா சோப்ரா:


டேட்டிங் தளமான Bumble-ல் கடந்த 2018ம் ஆண்டு முதலீடு செய்திருந்தார். அதன்பிறகுதான் அது இந்தியாவுக்குள் அறிமுகமானது. இதனை விளம்பரப்படுத்தும் வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். 

ஷில்பா ஷெட்டி:


இவர் Mamaearth என்ற நிறுவனத்தில் 1.6 கோடி முதலீடு செய்துள்ளார். தோல், தலைமுடி சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் தளம் இது. இந்த நிறுவனம் முதன்முதலாக கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading