தமிழகம்

“விசாரணை கமிஷன் முன் ஓ.பி.எஸ் ஆஜராகாதது ஏன்?” – உதயநிதி கேள்வி

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறிய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகாதது ஏன் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பரப்புரையில் உதய நிதி ஸ்டாலின் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மோடியின் அடிமைகளில் ஒருவர் தேனி மாவட்டத்தில் உள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று முதன் முறையாக கூறிய ஓபிஎஸ் அதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் ஒரு முறை கூட ஆஜராகாதது ஏன் என கேள்வி எழுப்பினர். அத்துடன் ஓபிஎஸ் அதிமுக தொண்டருக்கும் விசுவாசமாக இல்லை, ஜெயலலிதாவுக்கும் விசுவசமாக இல்லை என்று உதயநிதி குற்றஞ்சாட்டினார்.

Advertisement:

Related posts

சதுரங்கவேட்டை பட பாணியில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல்!

Jayapriya

பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பிரிவு நீக்கமா? மத்திய அரசு விளக்கம்!

Nandhakumar

முதல்வரை மிக கடுமையாக விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

Saravana

Leave a Comment