இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அஸ்வின் மைதானத்தில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ம் தேதி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 329 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்ததாக 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 482 ரன்கள் தேவையான நிலையில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்கள் வித்யாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.
ஆட்டத்தின் போது மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாஸ்டர் படத்தின் வாத்தி பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement: