வன்னியர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கப் போராடுவேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமி ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திமுகவிற்கு மக்கள் ஓட்டுப் போடுவதால் தமிழகம் பாழாய் போய்விடும் எனவும் விமர்சித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் செய்யும் அரசியலானது கார்ப்பரேட் அரசியல் எனக் கூறிய அவர் புதிய மாவட்டமான மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைய முயற்சி மேற்கொள்வோம். வன்னியர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கப் போராடுவேன் எனத் தெரிவித்தார் . கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.
Advertisement: