சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு, மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குற்றவாளியான இந்தி நடிகர் சஞ்சய் தத்தை, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே மகாராஷ்டிரா அரசு விடுவித்தது. சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது குறித்து பதிலளிக்குமாறு மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Advertisement: