புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் கொரோனா பிரிவு தவிர மற்ற பிரிவுகள் இன்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக ஒரு லட்சத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையின் கொரோனா பிரிவு தவிர மற்ற பிரிவுகள் இன்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement: