செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொது செயலாளர் அருண்சிங், தமிழகத்தில் போட்டியிடும் 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார். இதில்,

தாராபுரம் தனி தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல். முருகனும், கோவை மேற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும், காரைக்குடி தொகுதியில் ஹெச். ராஜாவும், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவும் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தியும் , அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையும் , மற்றும் துறைமுகத்தில் வினோஜ் பி. செல்வமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் எஸ். தணிகைவேலும், திருக்கோவிலூர் தொகுதியில் கலிவரதனும், மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே. சரஸ்வதியும், திட்டக்குடி தனி தொகுதியில், பெரியசாமியும், திருவையாறு தொகுதியில் பூண்டி எஸ். வெங்கடேசனும், மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் சரவணனும், மற்றும் விருதுநகர் தொகுதியில் பாண்டுரங்கனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ராமநாதபுரம் தொகுதியில் குப்புராமும், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரனும், குளச்சல் தொகுதியில் பி.ரமேசும் அறிவிக்கப்பட்டுள்ளனர். உதகை, தளி, விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கு, பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:

Related posts

வாட்ஸ் அப் செயலியின் தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க மே 15ஆம் தேதிதான் கடைசிநாள்!

Gayathri Venkatesan

குருமூர்த்தியின் பேச்சு, நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் பேச்சு- திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம்!

Jayapriya

62 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானம்… கடலில் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு?

Nandhakumar