உலகம்

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு!

2021-ம் ஆண்டு புத்தாண்டு, உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது. உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகும் நிலையில் நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது.

இந்திய நேரப்படி மாலை 4.25 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடி உற்சாக முழக்கங்களை எழுப்பியபடி 2021-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர். வாண வெடிகளை வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறியும் புத்தாண்டை வரவேற்றனர்.

தொடர்ந்து, இந்திய நேரப்படி மாலை 6.32 மணிக்கு ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு சிட்னி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. அப்போது சாலைகளில் கூடியிருந்த மக்கள், புத்தாண்டை வரவேற்கும் விதமாக உற்சாக குரல் எழுப்பினர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். இதனையடுத்து, இந்தியாவில் இன்னும் சில மணி நேரத்தில் புத்தாண்டு பிறக்கவுள்ளது.

Advertisement:

Related posts

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!

Dhamotharan

80 கிலோ எடையை தூக்கி 7 வயது சிறுமி அசத்தல்!

Saravana

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தைக்கு நேர்ந்த விபரீதம்; வைரலாகும் வீடியோ!

Saravana

Leave a Comment