வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமரும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராமில் தேமுதிக சார்பில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், 234 தொகுதிகளிலும் 10 சதவீதம் வாக்குகள் பெற்று நிரூபித்து காட்டிய கட்சி தேமுதிக மட்டுமே என்றார். தேமுதிகவிற்கு மக்கள் சக்தி மட்டுமே போதும். வருகிற தேர்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Advertisement: