இந்தியா செய்திகள் தொழில்நுட்பம்

தேஜஸ் ஸ்லீப்பர் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது மத்திய இரயில்வே துறை!

இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பயண அனுபவத்தை உயர்த்தும் நோக்கில் இரயில்வே அமைச்சகம் தேஜஸ் ஸ்லீப்பர் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு மாற்று இரயிலாக தேஜஸ் இரயில் செயல்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பிப்ரவரி 15 முதல் இந்த இரயில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இதுபோன்ற 500 தேஜஸ் இரயில்களை உருவாக்கும் பணியில் இரயில்வே தொழிற்சாலை ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ் இரயில்கள் மூலம் இரயில் பயண அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியில் இரயில்வே துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முழுவதும் நவீன முறையில் தயாரிக்கப்பட்ட இந்த இரயிலில் நவீன கழிப்பறை, மொபைல் சார்ஜ் வசதிகள், நவீன இருக்கைகள், தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. மேலும் விரைவில் துரு பிடிக்காமல் இருக்க பெட்டிகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் உருவாக்கப்படுகிறது. இதனால் பயணிகள், குறைந்த விலையில் வசதியான பயணத்தை அனுபவிக்க இயலும்.

Advertisement:

Related posts

உள்நாட்டு விமான சேவை; 70 முதல் 80% விமானங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி!

Dhamotharan

விவசாயியாக மாஸ் காட்டும் தோனி; துபாய்க்கு அனுப்பி வைக்க தயாராகும் காய்கறிகள்!

Jayapriya

டெல்லி விவசாயிகள் போராட்டம்: சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்கள்!

Niruban Chakkaaravarthi

Leave a Comment