சேலம் ஆத்தூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 12-ம் தேதி வேட்பாளர் பட்டியலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தனித் தொகுதியில் ஜீவா ஸ்டாலின் என்ற வேட்பாளர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆத்தூர் தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த தொகுதியில் கு.சின்னத்துரை என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. வேட்பாளர் மாற்றத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Advertisement: