செய்திகள்

திமுக கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவு!

திமுக -காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது என திராவிடர் கழகம், முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக -காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது எனவும், புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, தமிழகத்தில் பிரதான கூட்டணி கட்சிகள் என்பது, திமுக ,அதிமுக கூட்டணிதான் என்றும், மூன்றாவது அணி, நான்காவது அணி என இருப்பது, திமுகவின் ஓட்டுக்களைப் பிரிப்பதற்காகவே என்றும் தெரிவித்தார்.

4 ஆண்டுகளுக்கு மேலாக, ஆட்சியில் இருந்த முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு எவ்வித ஆக்க பணிகளை செய்யவில்லை என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொடர்ச்சியாக பல அறிவிப்புகளாகவே முதலமைச்சரின் செயல்பாடுகள் இருந்தாகவும், அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

2021 கல்வியாண்டுக்கான வகுப்புகளை எப்போது துவக்கலாம்? – CBSE பதில்

Niruban Chakkaaravarthi

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை!

Gayathri Venkatesan

ஹாலிவுட்டை கலக்கும் தமிழன்… உயர பறக்கும் சூர்யாவின் சூரரைப்போற்று

Saravana