தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனல்பறக்கும் பரப்புரை இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக தலைமையிலான அரசின் பதிவிக்காலம் வரும் மே மாத்த்துடன் நிறைவடைகிறது. முன்னதாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரப்பில் ஈடுபட்டனர். நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 998 பேர் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், பெண் வேட்பாளர்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் இருவரும் உள்ளனர். மேலும், பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவ படையினரும், மேலும் தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்

Jeba

பிரபல மாடல் தியாவின் திருமணத்தை நடத்தி வைத்த பெண் மதகுரு!

Karthick

தன் மீதான வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றக்கோரி கங்கனா ரனாவத் மனு

Saravana Kumar