செய்திகள்

தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு!

67வது ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழின் சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படம், மற்றும் அதில் நடித்த தனுஷூக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 67வது தேசிய திரைப்படங்களுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் தமிழின் சிறந்த படத்திற்கான மத்திய அரசின் விருதினை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நடித்த தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதினை தனுஷூடன் சேர்ந்து பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாயிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2010ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தனுஷ் பெற்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

2019ல் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்களை பொறுத்த அளவில், டி.இமான் விஸ்வாசம் திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் ஜான்சி திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகையாக கங்கணா ரணாவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த ‘சிச்சோர்’ திரைப்படத்திற்கு சிறந்த இந்தி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படமாக 2014ல் வெளிவந்த காக்கா முட்டை தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது. இத்திரைப்படத்தினை தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருந்தனர். மேலும், 2015ன் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வென்ற விசாரணை திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக தனுஷ் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மேற்கு வங்கத்தில் 78% வாக்குப்பதிவுடன் 3-ம் கட்ட தேர்தல் நிறைவு!

Gayathri Venkatesan

“நல்லவர்களுக்கு உங்கள் வாக்கு செல்ல வேண்டும்”: ஜி.கே.வாசன்

Karthick

கப்பலில் முடங்கிய உலக வர்த்தகம்!

L.Renuga Devi