தமிழகம்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு திருமணம்; முதல்வர் நடத்தி வைக்கிறார்

கோவையில் இன்று முதலமைமைச்சர் எடப்பாடி பழனிசாமி 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24ம் தேதி வருகிறது. இதையொட்டி கோவை சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று திருமணம் நடக்க உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைக்கின்றனர்.

திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்குகின்றனர். திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களின் உறவினர்கள், பொதுமக்களுக்கு அறுசுவை விருந்தும் அளிக்கப்பட உள்ளது. திருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

மக்களை அச்சுறுத்தும் காட்டு யானை… வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்…

Nandhakumar

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதி..

Saravana

ஆன்லைன் வகுப்பு படிக்க வற்புறுத்திய பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள்!

Jayapriya

Leave a Comment