செய்திகள்

ஜெயலலிதா பல்கலை., முதல் துணைவேந்தர் நியமனம்!

விழுப்புரத்தில் புதிதாக உதயமாகும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு முதல் துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் உருவாக்கப்படுவதற்கான சட்ட மசோதா கடந்த மாதம் 5 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழகத்திற்கு கடந்த மாதம் 27ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு முதல் துணை வேந்தரை நியமனம் செய்ததற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிடுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்த அன்பழகனை, டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Related posts

“தேர்தலுக்கு பிறகு திமுக கட்சியே இருக்காது” – முதல்வர் பழனிசாமி

Gayathri Venkatesan

புதுச்சேரியில் நேற்று மாலையுடன் பரப்புரை ஓய்ந்தது!

Karthick

திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டி

Jeba