சினிமா

“சாதியை உயர்த்தி சினிமா எடுப்பது அருவருப்பாக உள்ளது” – இயக்குநர் பேரரசு காட்டம்

சாதி, மதத்தை வளர்ப்பதற்காக சினிமா இல்லை. சாதியை உயர்த்தி சினிமா எடுப்பது அருவருப்பாக உள்ளது என இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்துள்ளார்.

குழலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் கலையரசன், பேரரசு, ஆர் வி உதயகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் பேரரசு, சினிமா என்பது மிக பெரிய சக்தி வாய்ந்த சாதனம். அதனால் தான் பல முதல்வர்கள் இதிலிருந்து வந்துள்ளனர். சினிமா மூலமாக சாதிகளை அழிக்க வேண்டும்.

சாதியை, மதத்தை வளர்க்க சினிமா இல்லை. சாதியை உயர்த்தி சினிமா எடுப்பது அருவருப்பாக உள்ளது. நாங்கள் சினிமாவை பார்க்க வந்துள்ளோம். உங்கள் சாதியை பார்க்க இல்லை. எந்த சாதியும் இல்லை என்று சொல்பவர்கள் தான் மனிதர்கள். பள்ளி விண்ணப்பத்தில் உள்ள சாதியை முதலில் எடுங்கள். சாதி என்ற காலத்தை விண்ணப்பத்தில் இருந்து எடுங்கள். சாதி சார்ந்த படங்களை எடுக்க வேண்டாம். மனித உணர்வுகளை படமாக எடுங்கள் என பேசினார்.

Advertisement:

Related posts

தேர்தலில் போட்டியிடும் சத்யராஜின் மகள்?

Jayapriya

ஓவைசிக்கு அழைப்பு விடுக்கவில்லை… திமுக சிறுபான்மை அமைப்பு மறுப்பு!

Saravana

நடிகை திரிஷாவை போன்று மற்ற நடிகர், நடிகைகளும் முன்வரவேண்டும்: UNICEF அமைப்பு வேண்டுகோள்!

Saravana

Leave a Comment