தமிழகம் முக்கியச் செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி; முதல்வர் அவசர ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் கோரப்பிடியில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் சிக்கி தவித்து வருகின்றன. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்முதல் அதிவேகமாக பரவிய கொரோனா கடந்த அக்டோபர் முதல் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மதியம் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு பணிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பிரச்சினை: திமுக புகார்!

Ezhilarasan

2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

Saravana Kumar

தனது விந்தணு மூலம் பிறக்கபோகும் குழந்தைக்கு தாயாக காத்திருக்கும் திருநங்கை மருத்துவர்!

Jeba