செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது: திருச்சி சிவா

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக மாநிலங்களவையில், திமுக எம்பி திருச்சி சிவா, குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்படுவதாக குற்றம்சாட்டிய திமுக எம்பி திருச்சி சிவா, அப்பள்ளிகளில் தமிழை கற்பிக்க ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். 6-ஆம் வகுப்பில் சமஸ்கிருத பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஏழாம் வகுப்புக்கு செல்ல முடியும் என அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட திருச்சி சிவா, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கிறதா? என வினவினார். பிராந்திய மொழி பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது என குற்றம் சாட்டிய அவர், மத்திய அரசின் இத்தகைய முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியும் இணைக்கப்பட வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தினார். திமுக எம்பியின் இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு, கல்வித்துறை அமைச்சகத்துக்கு, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரைத்துள்ளார்.

Advertisement:

Related posts

ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; அரசியல் எதிரிகளின் சதி என அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Saravana

பிப். 24ஆம் தேதி அதிமுகவினர் இல்லங்களில் விளக்கேற்ற கோரிக்கை!

Gayathri Venkatesan

காவல்துறையினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Niruban Chakkaaravarthi

Leave a Comment