வழக்கமாக தேர்தல் வாக்குறுதிகள் என்றால் மென்மையான சாலைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகளே பெரும்பான்மையான மாநிலங்களில் காணப்படும். இம்முறை சற்று வித்தியாசமாக குஜராத் மாநிலத்தின் வடோரா நகர காங்கிரஸ் தலைவர் பிரஷாந்த் படேல், காங்கிரஸ் குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களை கவரும் விதமாக மலிவான விலையில் உணவகங்கள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “பெரும்பாலும் வசதியானவர்கள் மட்டுமே உணவகங்களுக்கு செல்லும் நிலையை காணமுடிகிறது. நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வியல் சூழல் அவர்களை இதுபோன்ற உணவகங்களுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. இளைஞர்கள் மிகவும் சிரமப்படுவதை காணமுடிகிறது. தனது நண்பர்களுடன் உணவகங்களுக்கு செல்ல ஆசைப்படும் அவர்கள், குடும்ப சூழல் காரணமாக தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கின்றனர். இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே இதனால் அதிருப்தி ஏற்படுவதையும் பார்க்கமுடிகிறது. நாங்கள் இந்நிலையை மாற்ற எண்ணுகிறோம். நடுத்தர, ஏழை எளியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தன் நண்பர்கள், குடும்பத்தினருடன் இதுபோன்ற உணவகங்களுக்கு செல்வதை அதிகரிக்க மலிவான விலையில் உணவகங்கள் திறக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் முன்வந்துள்ளோம். இதன்மூலம் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்”என்று தெரிவித்தார்.
Advertisement: