குற்றம்

காதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதை தெரிந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை..

காதலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் விஷயம் தெரியவந்த காதலன் காதலியோட வீட்டுலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்னாமலை மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் அஜிஸ் – அமரீன் தம்பதியினர். 5 அண்டுகளுக்கு முன் திருமணம் ஆன இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். காய்கறி வியாபாரம் செய்துவரும் அஜிஸ் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம்.

வீட்டில் தனியாக இருந்த அமரீனுக்கு யோயோ என்ற சமூக வலைதள செயலி மூலம் தாம்பரம் அடுத்த சோலையூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அமரீனுக்கு திருமணம் ஆனதை அறியாத பூபதி அவரை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20-ம் தேதியன்று அஜிஸ் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது பூபதியை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார் அமரீன். தனது காதலியை முதன்முதலாக சந்திக்கப்போகிறோம் என்ற ஆவலோடு ஆசைஆசையாய் சென்றுள்ளார் பூபதி. வீட்டிற்கு சென்ற பின்னர்தான் அமரீனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்து அதிர்ச்சியான பூபதியை சமாதானப்படுத்தி அவருடன் 2 நாட்கள் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அமரீன். சம்பவத்தன்று வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக அமரீன் வெளியில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டிலுள்ள மின்விசிறியில் பூபதி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து புதுப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த பூபதியின் தந்தை தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பூபதி காதலித்த அமரீனுக்கு திருமணம் ஆனதை அறிந்த விரக்தியில்தான் பூபதி தற்கொலை செய்துகொண்டதாக அமரீன் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

மதுரையில் நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

Niruban Chakkaaravarthi

100 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை!

Jayapriya

மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!

Jeba