தமிழகம் முக்கியச் செய்திகள்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்!

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், கோயில் வளாகத்திலேயே இன்று நடைபெற்றது.

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரை திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. அப்போது வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்பார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, இரண்டாம் ஆண்டாக திருவிழாக்களை கோயில் வளாகத்திலேயே நடத்த அரசு உத்தரவிட்டது. இதனால் பாரம்பரிய விழாக்கள், பூஜைகள் ஆகமவிதிப்படி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. மேலும், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த 23-ம் தேதி சுவாமி புறப்பாடுடன் தொடங்கியது. நான்காம் நாளான நேற்று கள்ளழகர் திருக்கோலத்தில் சுந்தரராஜப் பெருமாள் எதிர்சேவை நடந்தது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், கோயில் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டு ரத வீதியில் செயற்கையாக வைகை ஆறு உருவாக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலையைச் சூடிக்கொண்டு, பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் , இன்று காலை 9 மணி அளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு தரிசிக்கும் வகையில், இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

Advertisement:

Related posts

தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Jeba

மக்களோடு நெருங்காமல், சட்டை கசங்காமல் அரசியல் செய்பவர் மு.க.ஸ்டாலின்- ஜெயக்குமார்!

Jayapriya

அறிஞர் அண்ணா நினைவு தினம்: நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

Jayapriya