தமிழகம்

உயர் கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு; யூஜிசி அறிவிப்பு!

உயர் கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு விடுத்துள்ள அறிவிப்பில், முதுகலை பயிலும் மாணவிகளுக்கான கல்வித்தொகை, பல்கலைக்கழக அளவில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வட கிழக்கு மாநிலங்களுக்கான இஷான் உதய் சிறப்பு உதவித்தொகை மற்றும் முதுகலை பயிலும் SC,ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகிய 4 கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு புதிதாக விண்ணப்பிக்கவும், ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் புதுப்பிக்கவும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக UGC அறிவித்துள்ளது.

இதன்படி, மாணவர்கள் ஜனவரி 20-ம் தேதி வரை கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதனை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சரிபார்ப்பதுடன் புதிதாக வரும் விண்ணப்பங்களை பிப்ரவரி 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தேசிய கல்வித்தொகைக்காக http//scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

Gayathri Venkatesan

அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Saravana

தொடர் கனமழையால் சிதம்பரத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்!

Saravana

Leave a Comment