செய்திகள்

இந்திய கடற்படை தினம்: வண்ண விளக்குக்களால் ஜொலிக்கும் ராணுவ கப்பல்

இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னை கடற்கரை பகுதியில் வண்ண விளக்குக்களுடன் ஜொலித்த இந்திய ராணுவ கப்பலை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தபோது, கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.இதன் மூலம் இந்திய ராணுவ படையினரின் வீரத்தை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, இன்று சென்னை கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்பகுதியில் இந்திய கப்பல் படையை சேர்ந்த ராணுவ கப்பல், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளித்தது.

வண்ண விளக்குகள் எரியவிட்டப்படி ராணுவ கப்பல் நின்றிருந்த காட்சியை கரையில் இருந்த எராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். மழை பெய்த போதும் அங்கிருந்த நகராமல் இருந்த பொதுமக்கள், நாட்டு மக்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் வீரத்துடன் பணியாற்றும் இந்திய கப்பல் படைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். சிலர், ராணுவ கப்பலை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement:

Related posts

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்!

Gayathri Venkatesan

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு!

Gayathri Venkatesan

கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் தமிழகம்!

Niruban Chakkaaravarthi

Leave a Comment