இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக இன்று 10-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
லடாக் எல்லையின் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி இருதரப்பு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேரிட்ட மோதலில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தன. இதன் தொடர்ச்சியாக ராணுவ கமாண்டர் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது.
Advertisement: