இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93,51,110 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 87,59,969 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,54,940 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,36,200 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 41,322 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41,452 பேர் குணமடைந்து உள்ளனர். 485 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 93.68 ஆகவும், இறப்பு சதவீதம் 1.46 ஆகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

Saravana

வறண்ட பூமியில் வெற்றிகண்ட பெண்கள்!

Saravana Kumar

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

Niruban Chakkaaravarthi

Leave a Comment